சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-18T01:35:02+05:30)

ஆலப்புழை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த பெண்ணும் சிக்கினார்.

திண்டுக்கல்,

ஆலப்புழையை அடுத்துள்ள மாராரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா (வயது 37). இவர், அப்பகுதியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த சிறுமியும் ஆதிராவுடன் சென்றுள்ளார்.

ஆனால் சிறுமிக்கு வேலை வாங்கி கொடுக்காமல் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் விடுவதற்காக ஆதிரா அழைத்து சென்றார். அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே சென்றதால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆதிராவை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆதிராவை பிடித்து மாராரிகுளம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆதிராவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை மாராரிகுளம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரியும் லைஜீ (வயது 39), போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி நெல்சன் தாமஸ் (46) மற்றும் பிரின்ஸ் (32), ஜினு (33) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆதிராவும் கைது செய்யப்பட்டார்.

Next Story