பிறந்த நாள் விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாகர்கோவில்,
அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா நேற்று குமரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றியும் இனிப்பு வழங்கப்பட்டது.
குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் ஞானசேகர், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், நகர செயலாளர் சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜாராம், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் தென்கரை மகாராஜன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் சந்தையடி பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் கோட்டார் கிருஷ்ணன், எம்.ஆர்.முருகன், ஜெயராமன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினகரன்அணி- தே.மு.தி.க.
இதேபோல் தினகரன் அணி சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ஜெங்கின்ஸ் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் என்.என்.ஸ்ரீ.அய்யப்பன், இ.என்.சங்கர், கே.சி.யூ.மணி, ஹேமந்த், டாக்டர் மாதேசன், எட்வின் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story