பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின விழா மலர் கண்காட்சி வீரேந்திர ஹெக்டே நாளை தொடங்கி வைக்கிறார்
பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின விழா மலர் கண்காட்சியை நாளை(வெள்ளிக்கிழமை) வீரேந்திர ஹெக்டே தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,
பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின விழா மலர் கண்காட்சியை நாளை(வெள்ளிக்கிழமை) வீரேந்திர ஹெக்டே தொடங்கி வைக்கிறார். இதில் இந்திரகிரி மலையில் பாகுபலி சிலை பூக்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை கமிஷனர் பிரபாஷ்சந்திர ராய் பெங்களூரு லால்பாக் பூங்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியரசு தின விழா மலர் கண்காட்சி
தோட்டக்கலைத்துறை சார்பில் 1922-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் வருகிற 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி குடியரசு தின மலர் கண்காட்சி பெங்களூரு லால்பாக் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 207-வது மலர் கண்காட்சி ஆகும்.
இந்த மலர் கண்காட்சி தொடக்க விழா நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. பத்மபூஷன் விருது பெற்றவரும், தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில் நிர்வாக தலைவருமான வீரேந்திர ஹெக்டே இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதில் தோட்டக்கலைத்துறை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி உள்பட பல்வேறு மடாதிபதிகள் கலந்துகொள்கிறார்கள்.
பகவான் பாகுபலி சிலை
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் கண்ணாடி மாளிகையில் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலா கோமதேஸ்வரர் கோவிலில் உள்ள இந்திரகிரி மலையில் பகவான் பாகுபலி சிலை பூக்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்த மலை 2 ஆயிரத்து 400 சதுரஅடி பரப்பில் 30 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மலையின் மீது பகவான் பாகுபலி சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. அவற்றை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தூரியம், ஹைபரிகம், ஓரியண்டல் லில்லீஸ், கர்னேசன், புரோமிலியாட், வேக்ஸ் மலர் உள்பட தேசிய மற்றும் சர்வதேச மலர்களை பயன்படுத்தி 15 நாட்களில் இந்த இந்திரகிரி மலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் இந்த மலையை பார்க்கும்போது ஒரு இயற்கை காட்சியை பார்ப்பது போல் உணர்வார்கள். மேலும் 15 வகையான மலர்கள் மூலம் குமட்டகிரி மலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கண்காட்சியின் போது பின்னணி இசையும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
ஓவியப்போட்டிக்கு ஏற்பாடு
நடனமாடும் வகையில் மலர் தொட்டிகள் மூலம் இந்திய தேசிய பறவையான மயில் வடிவமைக்கப்பட் டுள்ளது. அழகான தொங்கும் மலர் தொட்டிகள், மலர் தொட்டி கண்காட்சி, காய்கறிகளில் கலைநயம் தீட்டப்பட்டுள்ளன. தினைகளில் பாகுபலியின் முகத்தோற்றும் உருவாக்கப்பட்டு இருக்கும் காட்சிகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
பாகுபலி தொடர்பான மாநில அளவிலான ஓவியப்போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 75 கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கண்காட்சி நடைபெறும் நாட்களில் தனியார் வாகனங்களுக்கு லால்பாக்கில் அனுமதி இல்லை. பள்ளி வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மட்டும் டபுள் ரோடு வழியாக லால்பாக்கிற்குள் அனுமதிக்கப்படும்.
வாகனங்கள் நிறுத்தும் வசதி
சாந்திநகர், ஜே.சி.ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் கட்டிடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். அல்அமீன் கல்லூரி வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. லால்பாக்கிற்கு மெட்ரோ ரெயில் வசதி உள்ளதால், பொதுமக்கள் முடிந்தவரை மெட்ரோ ரெயிலை பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறோம்.
பார்வையாளர்கள் உடன் கொண்டு வரும் பைகளை பாதுகாப்பாக வைக்க தேவையான வசதியும் செய்யப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் கேமராக்கள் உள்ளே எடுத்து செல்லலாம். சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகை உள்பட அனைத்து இடங்களிலும் கேமராவை பயன்படுத்திக் கொள்ளலாம். பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணம்
இந்த கண்காட்சி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. பள்ளி குழந்தைகள் 20, 22, 23, 24, 25 மற்றும் 27-ந் தேதிகளில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60-ம், குழந்தைகளுக்கு 20-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு பிரபாஷ்சந்திர ராய் கூறினார்.

Related Tags :
Next Story