மராட்டிய மாநில தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார்


மராட்டிய மாநில தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:30 PM GMT (Updated: 17 Jan 2018 10:13 PM GMT)

மராட்டிய மாநில தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார்.

மும்பை,

மராட்டிய மாநில தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார்.

பொங்கல் விழா

மராட்டிய மாநில தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந்தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து கூட்டமைப்பின் நிர்வாக குழுத்தலைவர் கர்னல் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழர் நலக்கூட்டமைப்பின் சார்பில் தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா வரும் 29-ந்தேதி மும்பை கிங்சர்க்கிள் சண்முகானந்தா அரங்கில் அமைப்பின் தலைவர் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடத்திட முடிவு செய்து இருக்கிறோம்.

முதல்-மந்திரி கலந்துகொள்கிறார்

விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பலதுறைகளில் சாதித்த மராத்திய வாழ் தமிழர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார். மேலும் பலதுறை மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். விழாவில் தெகிடி, சேதுபதி ஆகிய படங்களின் இசையமைப்பாளர் நிவாசின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

இதேபோல பார்வையாளர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story