எச்.ராஜாவை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2018 3:54 AM IST (Updated: 18 Jan 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று காலை ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவடி,

ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சைக்குரிய கருத்து மோதலின்போது முஸ்லிம்களை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று காலை ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தணிக்கை குழு தலைவர் முகம்மது யூசுப், மாவட்ட செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் அப்துல் ஹாதி, துணைத்தலைவர் பக்ருதீன் உள்பட பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story