சேத்தியாத்தோப்பு அருகே பிரபல ரவுடி விஷம் குடித்து தற்கொலை
சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப பிரச்சினையில் பிரபல ரவுடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகன் ஜெகன் என்கிற ஜெயப்பிரகாஷ் (வயது 35). இவருடைய மனைவி தீபா.
பிரபல ரவுடியான ஜெயப்பிரகாஷ் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சேத்தியாத்தோப்பு, நெய்வேலி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயப்பிரகாசுக்கும், தீபாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தகராறு நடந்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயப்பிரகாஷ், வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்தாக தெரிகிறது.
பின்னர் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடி கிடந்தார். இதற்கிடையே வெகுநேரமாகியும் வீட்டின் மாடியில் இருந்து வராததால் சந்தேகமடைந்த தீபா, மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு ஜெயப்பிரகாஷ் உயிருக்கு போராடி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story