கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு; பொதுமக்கள் அவதி
கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
வில்லியனூர்,
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் போராட்ட குழு சார்பில் தங்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து போராட்ட குழு தலைவர் மாறன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் காரணமாக பத்திரப்பதிவு, பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியாமலும், சான்றிதழ் பெற முடியாமலும், வரிகள் எதுவும் கட்ட முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாட்சி உள்ளனர். திருமணத்தை பதிவு செய்ய வந்த 2 ஜோடிகள் பதிவு செய்ய முடியாமல் வேதனையோடு திரும்பினர்.

Related Tags :
Next Story