தூத்துக்குடியில் ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைவரிசை


தூத்துக்குடியில் ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைவரிசை
x
தினத்தந்தி 19 Jan 2018 2:30 AM IST (Updated: 19 Jan 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஆசிரியை யிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஆசிரியை யிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்ட னர்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சங்கிலி பறிப்பு

தூத்துக்குடி தபால் தந்தி காலனி 14-வது தெருவை சேர்ந்தவர் ஆசீர்ராஜன். ஓய்வுபெற்ற துறைமுக ஊழியர். இவருடைய மனைவி ஸ்டெல்லா பாலின் (வயது 52). இவர் புதியம்புத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். தபால் தந்தி காலனி 12-வது தெருவில் அவர் நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில், ஸ்டெல்லா பாலின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லா பாலின், நேற்று முன்தினம் இரவு சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து போலீசார், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வரு கின்றனர்.

Next Story