மதுரவாயலில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
மதுரவாயலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
மதுரவாயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பரத் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். மதுரவாயல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கையில் பையுடன் நின்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், மதுரவாயலை சேர்ந்த அப்துல்கலாம்(வயது 35), இப்ராஹிம்(42), சர்தார்(55) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக கொண்டு வந்து கடைகளுக்கு வினியோகம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ஆறுமுகம்(42), பிரகாஷ்(23), சங்கர்(23), செல்வம்(26) ஆகிய மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story