ஹஜ் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து நெல்லையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஹஜ் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,

ஆர்ப்பாட்டம்
இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரைக்கு மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.
மாநில சிறுபான்மைத்துறை துணை தலைவர் அப்துல்காதர், மாவட்ட துணை தலைவர் முகமது அனஸ்ராஜா, மாநகர துணை தலைவர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.வேல்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது, தனுஷ்கோடி ஆதித்தன் பேசும் போது, “முந்தைய காங்கிரஸ் ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருந்தது. ஏராளமான புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தற்போது ஆளுங்கின்ற பாரதீய ஜனதா அரசு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரைக்கு மானியத்தை ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஹஜ் மானியத்தை திரும்பி வழங்க வேண்டும். அப்படியில்லையென்றால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும்“ என்றார்.
கோஷங்கள்
தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, இளைஞர் அணி முன்னாள் மாநில பொதுச்செயலாளர் காமராஜ், கட்சி நிர்வாகிகள் உதயகுமார், மரியகுழந்தை, யோபு, ராமேசுவரன், தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story