நிலத்திற்கு பட்டா வழங்காததால் தாசில்தார் கார் ஜப்தி
குளித்தலையில் நிலத்திற்கு பட்டா வழங்காததால் தாசில்தாரின் கார் ஜப்தி செய்யப்பட்டது.
குளித்தலை,
தோகைமலை ஊராட்சி ஒன்றியம் கழுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாகாளிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் கருப்பண்ணன், பெருமாள், மாரியப்பன் மற்றும் ராமசாமி. இவர்கள் 4 பேரும் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் 3.42 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இந்த நிலத்திற்கு தங்கள் பெயரில் பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லையாம். அவர்கள் இறந்தபின்னர் அவர்களின் மகன்களான கருப்பண்ணன் மகன் சுப்பையன், பெருமாள் மகன் வடிவேல், மாரியப்பன் மகன் ரெங்கநாதன், ராமசாமி மகன்கள் வேல்முருகன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பட்டா கேட்டு மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லையாம். இதையடுத்து அவர்கள் 5 பேரும் பட்டா வழங்கவேண்டும் எனக்கோரி குளித்தலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனு தொடர்பாக விசாரணை செய்த அப்போதிருந்த நீதிபதி அன்வர்சதாத் இதுகுறித்து விசாரணை செய்து, 2 மாதத்திற்குள் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டார். தற்போது 2 ஆண்டுகள் ஆனநிலையிலும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் 5 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரணை செய்த தற்போதுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இருதயராணி, குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருளை ஜப்தி செய்யவேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி நேற்று குளித்தலை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த குளித்தலை சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் காரை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து அதற்கான கடிதத்தை கார் கண்ணாடியில் ஒட்டிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story