ஏ.டி.எம். கார்டு மோசடிகளை தடுக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தகவல்
ஏ.டி.எம். கார்டு மோசடிகளை தடுக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஏ.டி.எம். கார்டு மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக ஏ.டி.எம். கார்டு மோசடி குற்றங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு வங்கி அல்லது காப்பீடு நிறுவன ஊழியர்கள் போல் பேசி, உங்களது ஏ.டி.எம். கார்டு காலாவதியாக உள்ளது என்றும், அதனை புதுப்பிக்க ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்களை கூறுங்கள் என்றும், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்றும் கூறி ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பெற்று, சிலர் மோசடி செய்து வருகின்றனர்.
விழிப்புணர்வு கூட்டம்
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து வங்கி மேலாளர்களுக்கு, தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் பாமர மக்களுக்கு தமிழில் குறுஞ்செய்தி அனுப்பவும், பொதுமக்களிடையே காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காவல்துறை சார்பில் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மூலமும் வங்கி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற மோசடி செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கு அல்லது இனந்தெரியாத நபர்களிடம் தங்களை பற்றிய குறிப்புகள், தங்களது வங்கி கணக்கு மற்றும் கிரடிட்-டெபிட் கார்டுகள் விவரங்களை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story