தூத்துக்குடியில் பரிதாபம் வேனில் இருந்து தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி


தூத்துக்குடியில் பரிதாபம் வேனில் இருந்து தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 18 Jan 2018 8:30 PM GMT (Updated: 2018-01-19T01:37:06+05:30)

தூத்துக்குடியில் வேனில் இருந்து தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வேனில் இருந்து தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

குழந்தை

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மகன் ஆல்வின் காபிரியல் (வயது 2½). நேற்று மாலையில் ஆனந்தராஜ் தனது மனைவி, குழந்தை மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் வேனில், புதுக்கோட்டை அருகே ராமநாச்சியார்புரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றார்.

அப்போது ஆலயம் அருகே எதிர்பாராதவிதமாக வேனில் இருந்து 2½ வயது குழந்தை ஆல்வின் காபிரியல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்த ஆல்வின் காபிரியல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. பின்னர் குழந்தையின் உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story