சட்டவிரோத மீன்பிடித்தல், வேட்டையாடுதலை தடுக்க ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் ரோந்து
சட்டவிரோத மீன்பிடித்தல், வேட்டையாடுதலை தடுக்க ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மண்டியா,
சட்டவிரோத மீன்பிடித்தல், வேட்டையாடுதலை தடுக்க ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி நடக்கிறது.
ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம்
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ளது, ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் சிறு தீவுகள் போல் நீர்நிலைகள் சுற்றி காணப்படுகிறது. இங்கு உள்நாட்டு பறவை இனங்கள், வெளிநாட்டு பறவை இனங்கள் வசித்து வருகின்றன. சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகளின் வாழ்விடமாக இந்த சரணாலயம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் அதிகளவில் வெளிநாட்டு பறவை இனங்கள் மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய வருகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் பறவைகளின் கீச்... கீச்... சத்தங்களை கேட்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் ஒரு வரப்பிரசாதம். இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மரங்களில் கூடுகட்டி வசிக்கும் பறவைகளையும், தண்ணீரில் நீந்தி மகிழும் பட்சிகளையும் கண்டு ரசிக்கலாம். குறிப்பாக மயில்கள், கூழைக்கடா நாரைகள், கொக்கு இனங்கள் உள்பட பல்வேறு பறவைகள் இங்கு ஏராளமாக உள்ளன.
வேட்டையாடுதல்
இந்த சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஓடும் காவிரி ஆற்றில் ஏராளமான மீன்களும், முதலைகளும் வாழ்கின்றன. இந்த நிலையில் சரணாலயத்திற்கு உட்பட்ட காவிரி ஆற்றில் மீன்கள் பிடித்தல், பறவைகள் வேட்டையாடுதலில் சமூகவிரோத கும்பல் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 13-ந்தேதி சட்டவிரோதமாக நைலான் கயிற்றால் ஆன வலைகளால் மீன் பிடித்துள்ளனர். இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 பேர் கும்பல் வனத்துறையினரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியது. இருப்பினும் வனத்துறையினர் திறமையாக செயல்பட்டு 7 பேரையும் கைது செய்தனர். கைதான 7 பேரும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு நைலான் வலையில் சிக்கி ஒரு வயது முதலை ஒன்று செத்திருந்தது. மேலும் சமூகவிரோதிகளால் பறவைகளை வேட்டையாடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் ரோந்து
இதுபோன்ற சம்பவங்களால் பறவைகள் சரணாலயத்திற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மைசூரு மண்டல வனத்துறை, ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தது.
அதன்படி தற்போது பறவைகள் சரணாலயத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் கண்காணிப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சரணாலயத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் வனத்துறையினரின் தற்காப்புக்காக இரட்டை குழல் துப்பாக்கியும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் இரவு-பகல் என ஷிப்டு முறைகளில் ரோந்து வருகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளால் இனி ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது முற்றிலும் குறையும் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story