‘இந்தியா-இஸ்ரேல் நட்பு சொர்க்கத்தில் உண்டானது’ இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்
“இந்தியா- இஸ்ரேல் நட்பு சொர்க்கத்தில் உண்டானது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பெருமிதம் தெரிவித்தார்.
மும்பை,

இஸ்ரேல் பிரதமர்
அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ நேற்று மும்பை வந்தார். அரபிக்கடல் அருகே அமைந்துள்ள தாஜ் ஓட்டலில் தொழில் அதிபர்களை சந்தித்து அவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார்.
பின்னர், அவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “நாம் உலகில் மிகவும் பழமையான பாரம்பரியத்தை கொண்டிருக்கிறோம். ஜனநாயக நாடான நாம், சுதந்திரம், மனிதாபிமானத்தில் அன்பை பகிர்கிறோம். இந்தியா- இஸ்ரேல் இடையே ஆன நட்பு சொர்க்கத்தில் உருவானது” என்று பெருமிதத்துடன் கூறினார்.
புத்தாக்கத்தில் கவனம்
மேலும், தொழில் அதிபர்கள் புதுமையான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், புதுமையான சிந்தனைகளை உடையவர்களுக்கு தான் எதிர்காலம் இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நெருங்கிய நட்பை பெஞ்சமின் நேட்டன்யாஹூ விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா- இஸ்ரேல் கூட்டமைப்பு முன் எப்போதும் இல்லாத உயரத்தை எட்டி, வெற்றி பெற்று இருக்கிறது. இது வெறும் ஆரம்பம் தான். அதிசயத்தின் தொடக்கம். பழமைவாய்ந்த நட்பும், சாத்தியக்கூறுகளும் எல்லையற்றது” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, தாஜ் ஓட்டலில் பயங்கரவாத தாக்குதல் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். பார்வையாளர் புத்தகத்தில் சில நினைவுக்குறிப்புகளை எழுதினார். அப்போது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடனிருந்தார்.
சிறுவனுடன் சந்திப்பு
இதைத்தொடர்ந்து, சபாத் இல்லம் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, மும்பை பயங்கரவாத தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த இஸ்ரேல் நாட்டின் 11 வயது சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க்கை சந்தித்து பேசினார். மேலும், சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் யூத மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரை யாடினார். அத்துடன், இந்தி திரையுலகினரையும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ சந்தித்து பேசினார்.
ஆர்ப்பாட்டம்
முன்னதாக, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பைகுல்லாவில் சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து அழைத்து சென்றதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ இன்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேல் திரும்புகிறார். இஸ்ரேல் பிரதமர் ஒருவர், நாட்டின் நிதி தலைநகரான மும்பைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story