பண்டாராவில் மாயமான கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்பு 2 நண்பர்கள் கைது
பண்டாராவில் மாயமான கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
மும்பை,
பண்டாராவில் மாயமான கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
கல்லூரி மாணவி
பண்டாராவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், சமீபத்தில் டியூஷன் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில், அந்த மாணவியின் நண்பர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்கொலை
இந்தநிலையில், பைகங்கா ஆற்றில் அந்த மாணவி பிணமாக மிதந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் காயம் ஏற்பட்டதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை. எனவே, அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
விசாரணையில், நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்சினையில் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story