கதர் கிராம தொழில் வாரிய ஊழியர்கள் தர்ணா


கதர் கிராம தொழில் வாரிய ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 19 Jan 2018 4:34 AM IST (Updated: 19 Jan 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட தொழில் மைய அலுவலகம் முன்பு கதர் கிராம தொழில் வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டன.

புதுச்சேரி,

புதுச்சேரி கதர் கிராம தொழில் வாரிய ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. புதுவை அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் செல்வலிங்கம், கோதண்டராமன், நடராஜன், பாலகுமார், சம்பந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில், காலியாக உள்ள தலைமை செயல் அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை கணக்கு அலுவலர் ஆகிய பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும், மாதந்தோறும் சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும், கதர் வாரிய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குழந்தைகள் கல்வி உதவித்தொகை, மருத்துவ செலவு, போக்குவரத்து படி ஆகியவற்றை விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story