பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று த.மா.கா. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மதுரை,
மதுரையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மாணவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைவது வேதனைக்குரியது. அவர்களை பாதுகாப்பதற்காக வெளிமாநிலங்களில் சுற்றுலா மையங்களில் மாணவர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனை மையத்தை ஏற்படுத்துவதோடு, டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும் பாதுகாப்பு மையம் ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்திட, அதனை ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து முரண்பட்ட கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம், குறித்த காலக்கெடுவுக்குள் உண்மையை கண்டறிந்து வெளிக்கொண்டு வர வேண்டும்.
ஹஜ் மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது வரவேற்கத்தக்கதல்ல. நீதிமன்றம் படிப்படியாக தான் ஹஜ் மானியத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு திடீரென்று ஹஜ் மானியத்தை நிறுத்தியுள்ளது. தற்போது இதற்கு என்ன அவசியம்? என்று தெரியவில்லை. எனவே மத்திய அரசு மீண்டும் ஹஜ் மானியத்தை வழங்குவதாக அறிவிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கும்பகோணத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். உள்ளாட்சி வார்டுகளை மறு வரையறை செய்ததில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தற்போது தேர்தலை நடத்தினால் அது ஒரு தரப்பிற்கு சார்பாக அமையும். எனவே தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் வார்டுகளை மறுவரையறையை செய்ய வேண்டும்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து தனது கருத்தை கூறாமல் தவிர்த்திருக்கலாம். இந்த பிரச்சினையை வளரச்செய்வது வருத்தம் அளிக்கிறது. எனவே இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அதனை அங்கீகரிப்பது வாக்காளர் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் இனி எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது.
தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலையை பொறுத்து த.மா.கா. யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story