கோவில்பட்டியில், பிப்ரவரி 25-ந்தேதி 2-வது குடிநீர் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,

ஆய்வு கூட்டம்
கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதியில் நேற்று நடந்தது. செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் அனிதா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் விசுவலிங்கம், உதவி செயற்பொறியாளர் விஜயபாலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு
கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட 2-வது குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு பெற்று விட்டது. இதனை அடுத்த மாதம் (பிப்ரவரி) 25-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கிறார். கோவில்பட்டி நகர் முழுவதும் கூடுதலாக பகிர்மான குடிநீர் குழாய்கள் அமைக்க ரூ.15 கோடியே 30 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சிகளை தொடங்குவதால், அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. எம்.ஜி.ஆர். திராவிட பாரம்பரியத்தை காப்பாற்ற அ.தி.மு.க.வை தொடங்கி, திராவிட ஆட்சியை நிலைநிறுத்தி காட்டினார். அ.தி.மு.க.வை அகில இந்திய கட்சியாக ஜெயலலிதா உருவாக்கினார். மேலும் அவர் ஏற்கனவே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களையும் ஒருங்கிணைத்து ஆன்மிக அரசியலை நடத்தி காட்டினார்.
அ.தி.மு.க. அமோக...
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி, அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோன்று முஸ்லிம்களுக்கு நோன்பு கஞ்சி வழங்குவதற்காக பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கினார்.
ஹஜ் புனித யாத்திரை செல்ல மானியம் வழங்கினார். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்லவும் மானியம் வழங்கினார்.
தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Related Tags :
Next Story