காட்டூரில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


காட்டூரில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2018 3:45 AM IST (Updated: 20 Jan 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

காட்டூரில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் அருகே காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் வேதியியல் துறை மாணவ, மாணவிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒரு ஆசிரியர் வேதியியல் துறையில் படிக்கும் ஒரு மாணவியை தரக்குறைவாக திட்டியதாகவும், அந்த மாணவி இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, அவருடைய பெற்றோரை அழைத்து வருமாறு கூறப்பட்டதாகவும், கடந்த புதன்கிழமை கல்லூரிக்கு வந்த அந்த மாணவியை நுழைவுவாயிலில் நீண்ட நேரமாக நிற்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் அந்த மாணவி, அவருடைய தாயாருடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் கிறிஸ்டி செல்வராணி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் உடன்பாடு ஏற்படாததால் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுப்பதற்காக அனைத்து மாணவ, மாணவிகளும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

நேற்று மதியம் கலெக்டர் ராஜாமணியை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தி அந்த மாணவி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் சார்பில் மனு அளித்தனர். 

Next Story