வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2018 3:15 AM IST (Updated: 20 Jan 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட தலைவர் ஏ.சி.பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முனிசாமி, ரவி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மகிந்தன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், வேலூர் மாநகராட்சியில் பணிபுரிந்துவரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பம்பு ஆபரேட்டர்கள் 128 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story