கூவத்தூர் விடுதியில் ரூ.10 கோடி வாங்கியதாக கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லை கருணாஸ் எம்.எல்.ஏ. பேச்சு
அரசியல் ஒத்துவராது என்றும், கூவத்தூர் விடுதியில் ரூ.10 கோடி வாங்கியதாக கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லை என்றும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
திண்டுக்கல்,
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
என்னுடைய உண்மையான பெயர் கருணாநிதி ஆகும். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி சினிமா, அரசியல் துறையில் செய்த சாதனையை நிச்சயமாக யாரும் கடந்து வர முடியாது. இதனால் எனது பெயரை மாற்றிக்கொண்டேன். இளமையிலேயே வறுமையின் உச்சத்தை பார்த்தவன். உணவு, உடை, இருக்க இடம் இல்லாமல் சென்னையில் அழைந்தேன்.
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்துக்கு சென்றேன். அவர் இல்லாதபோதும் சட்டமன்றத்துக்கு செல்கிறேன்.பேச்சுகள் மாறிக்கொண்டு இருக்கின்றன. அதுபோல என்னால் பேசமுடியாது. என்றைக்கும் ஒரே பேச்சு. அது உண்மையாக இருக்கவேண்டும். கனவில் கூட பொய்சொல்லக்கூடாது என்று நினைப்பவன். அரசியல் நமக்கு சரிபட்டு வராது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்காக கடைசி வரை விசுவாசமாக நான் இருப்பேன். ஆனால் தற்போது அவர்களுக்குள் நடக்கக்கூடிய பிரச்சினையில் நான் தலையிடவேண்டிய அவசியம் கிடையாது. வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் நானும், நடிகர் சமுத்திரக்கனியும் இணைந்து நடிக்கிறேன்.
இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கக்கூடிய ஒரு படத்திலும் நடிக்கிறேன். 2 படங்களுக்கும் ரூ.45 லட்சம் ஊதியம் பேசியுள்ளேன். நான் வருமான வரி முறையாக செலுத்திக்கொண்டிருக்கிறேன். அதனால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கூவத்தூரில் ரூ.5 கோடி, ரூ.10 கோடி வாங்கினேன் என்று கூறுகிறார்கள். இதிலும் சிறிதளவும் உண்மை இல்லை. கை, கழுத்தில் இவ்வளவு நகை அணிந்திருப்பது குறித்து கேட்கிறார்கள். கருப்பாக இருப்பவனுக்கு தான் இந்த நகையை கண்டுபிடித்தார்கள் என்று என் மனைவியிடம் அடிக்கடி கூறுவது உண்டு.
பிரதமர் மோடி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் எந்திரத்தில் போட்டு பழைய ரூபாய் நோட்டை அரைக்கின்றனர். நாளைக்கே புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துவிட்டால் என்ன ஆகும். எனவே இருக்கிற வரையில் அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story