மு.க.ஸ்டாலினின் பினாமியாக டி.டி.வி.தினகரன் செயல்பட்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், மு.க.ஸ்டாலினின் பினாமியாக டி.டி.வி.தினகரன் செயல்பட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல்,
அ.தி.மு.க. சார்பில், எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான மருதராஜ் தலைமை தாங்கி பேசினார். பகுதி கழக செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, துளசிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான லியாகத் அலிகான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், மு.க.ஸ்டாலினின் பினாமியாக டி.டி.வி.தினகரன் செயல்பட்டார். டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பணம் பெறாமல் வாக்களித்தவர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக உள்ளனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தியதுதான் அ.தி.மு.க.வின் சாதனை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 30 மாவட்டங்களில் நடந்த இந்த விழாக்களில் மட்டும் 521 புதிய திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 200 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 329 முடிவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லில் திப்புசுல்தானுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இதேபோல, ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கும் மணிமண்டபம் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. முத்தலாக், ஹஜ் பயண மானியம் ரத்து போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் அமைக்க ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது. அதற்கு அதிகமாக கட்டணம் கேட்டால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள தனித்தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story