திருப்பூரில் சி.ஐ.டி.யு.சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தியாகிகள் தினத்தையொட்டி சி.ஐ.டி.யு. சார்பாக புதிய பஸ் நிலையம் அருகில் நேற்றுமாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
தியாகிகள் தினத்தையொட்டி சி.ஐ.டி.யு. சார்பாக புதிய பஸ் நிலையம் அருகில் நேற்றுமாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை செய லாளர் கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ‘ஒகி’ புயல் பாதிப்பிற்கு தமிழக அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தை அனைத்து கிராம புறங்களிலும் அமல்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story