பெங்களூரு லால்பாக்கில் குடியரசுதின மலர் கண்காட்சி வீரேந்திர ஹெக்டே தொடங்கி வைத்தார்


பெங்களூரு லால்பாக்கில் குடியரசுதின மலர் கண்காட்சி வீரேந்திர ஹெக்டே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2018 3:30 AM IST (Updated: 20 Jan 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சியை வீரேந்திர ஹெக்டே தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சியை வீரேந்திர ஹெக்டே தொடங்கி வைத்தார்.

மலர் கண்காட்சி

பெங்களூரு லால்பாக்கில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தையெட்டி பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தின மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மலர் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் பத்மபூஷன் விருது பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவில் தலைவர் வீரேந்திர ஹெக்டே கலந்து கொண்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மலர் கண்காட்சியிலும் முத்தாய்ப்பாக ஒவ்வொரு வரலாற்று சின்னம் பூக்களால் வடிவமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்திரகிரி மலையில் பகவான் பாகுபலி சிலை(கோமதேஸ்வரர்) அமைந்து இருப்பது போல் இயற்கை காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அலங்கார வளைவுகளும்...

அதில் பூக்களால் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. பூக்களால் உருவாக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகளும் அதில் இடம் பெற்று இருக்கின்றன. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. நமது நாட்டின் தேசிய பறவையான மயில் மலர்களால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பூந்தோட்டம், தக்காளி தோட்டங்கள் இடம் பெற்றுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பூக்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அந்தோரியம், ஆர்கிட்ஸ், விங்கா, போகன்வில்லா, இம்பேஷன்ஸ், லில்லி, அகாபாந்தஸ், ஹெலிகோனியா, எகூனியா, கார்னேஷன், குலாபி, சைக்லோமன், பெடுனியா, பாயின்செடியா உள்ளிட்ட வகை பூக்களால் பல்வேறு வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

28-ந் தேதி வரை நடைபெறும்

இந்த கண்காட்சி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, தோட்டக்கலைத்துறை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், மேயர் சம்பத்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மலர் கண்காட்சியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Next Story