மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்


மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Jan 2018 3:15 AM IST (Updated: 20 Jan 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று கவர்னருக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

மைசூரு,

மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று கவர்னருக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்-மந்திரி சித்தராமையா


மைசூரு பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக இருந்து வருபவர் குமார். இவர் நேற்று கர்நாடக கவர்னரும், அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருமான வஜூபாய் வாலாவுக்கும், மைசூரு பல்கலைக்கழக துணை வேந்தர் பசவராஜுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன்படி மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் மைசூரு மாவட்டத்திலேயே பிறந்து, மைசூரு பல்கலைக்கழகத்திலேயே படித்து, பின்னர் வக்கீலாகவும், பார் கவுன்சில் தலைவராகவும் பணியாற்றி, சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, மந்திரியாக உயர்ந்து, துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து, தற்போது முதல்-மந்திரி பதவியையும் அலங்கரித்து, 14 முறை முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தவரான சித்தராமையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை.

கவுரவ டாக்டர் பட்டம்

அதனால் இந்த ஆண்டு முதல்-மந்திரி சித்தராமையாவின் பல்வேறு சாதனைகளை பாராட்டி அவருக்கு மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவிக்க வேண்டும். கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழுவினர் ஆலோசனை கூட்டம் நடத்தி சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு ஆட்சிமன்ற குழுவினர் ஆலோசனை கூட்டம் நடத்தி சித்தராமையாவை கவுரவ டாக்டர் பட்டத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். அவரை மைசூரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்து கவுரவப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

உறுதி

மைசூரு பல்கலைக்கழக கவுரவ டாக்டர் பட்டத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையாவின் பெயரை, ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஒருவர் தற்போது பரிந்துரை செய்துள்ளார்.

இன்னும் 2-க்கும் மேற்பட்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் சித்தராமையாவின் பெயரை பரிந்துரை செய்தால், அவருக்கு டாக்டர் பட்டம் கிடைப்பது உறுதி என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story