சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி திடீர் ஆய்வு


சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jan 2018 4:15 AM IST (Updated: 20 Jan 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா திடீரென ஆய்வு செய்தார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா திடீரென விமான நிலையத்தில் ஆய்வு செய்தார். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் விமான நிலையத்தில் பணிகள் செய்யப்பட்டு உள்ளதா?. டிராலிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை அவர் ஆய்வு செய்தார்.

விமான நிலையத்தில் பொங்கல் பண்டிகைக்காக செய்யப்பட்டு இருந்த கலாசார மற்றும் பண்பாட்டு அலங்காரங்களையும் அவர் பார்வையிட்டார். விமான நிலையத்தில் உள்ள கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் பார்த்தார்.

அப்போது அவர், விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தனிவசதிகள் ஏற்படுத்தி தர வேண்டாம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆய்வின்போது சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story