குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை கற்பழித்த மந்திரவாதி கைது


குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை கற்பழித்த மந்திரவாதி கைது
x
தினத்தந்தி 20 Jan 2018 4:00 AM IST (Updated: 20 Jan 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணை கற்பழித்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

புனே,

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணை கற்பழித்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

பெண் கற்பழிப்பு

சத்தாராவை சேர்ந்த 37 வயது பெண் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு தீராத நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்தநிலையில் மந்திரவாதி ஹைதர் அலி என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானார். அவர் அந்த பெண்ணுக்கு இருக்கும் நோயை குணப்படுத்துவதாக கூறி, அவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார்.

சம்பவத்தன்று வழக்கம்போல பெண்ணின் வீட்டிற்கு வந்த ஹைதர் அலி, தான் வாங்கி வந்திருந்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அந்த பெண்ணிற்கு குடிக்க கொடுத்தார். அதை குடித்த பெண் மயங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹைதர் அலி, அந்த பெண்ணை கற்பழித்து, அந்த காட்சிகளை தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார்.

மந்திரவாதி கைது

இந்தநிலையில் மந்திரவாதி ஹைதர் அலி அந்த ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பெண்ணிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகளை பறித்து உள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கற்பழித்ததுடன் நகைகளை பறித்த மந்திரவாதி ஹைதர் அலியை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

Next Story