ஒவ்வொரு வீட்டிற்கும் பாஸ்போர்ட் தேடிச் செல்ல நடவடிக்கை; சுஷ்மா சுவராஜ் பேச்சு
ஒவ்வொரு வீட்டிற்கும் பாஸ்போர்ட் தேடிச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்துவைத்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார்.
காரைக்கால்,
காரைக்கால் தலைமை தபால் நிலைய வளாகத்தில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த மையத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து காரைக்கால் டணால் தங்கவேலு கலையரங்கில் இதற்கான விழா நடைபெற்றது.
விழாவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கமலக்கண்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
தொடர்ந்து மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இந்த மாதத்தில் காரைக்காலில் இந்த தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தனது பல்வேறு பணிகளுக்கிடையே இந்த விழாவில் கலந்துகொள்ள வந்துள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், தபால் துறை இலாகாவும் இணைந்து தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களை எல்லா மாநிலங்களிலும் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன். புதுச்சேரி மாநிலத்தில் முதலாவது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையமாக இந்த மையம் அமைந்துள்ளது. காரைக்கால் மக்கள் இனிமேல் பாஸ்போர்ட்டுக்காக 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரிக்கு செல்ல வேண்டியதில்லை.
நாடு முழுவதும் 236 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையத்தை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 59 மையங்கள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தலைமை தபால் நிலையங்களுடன் இணைந்து செயல்படும். இந்த முயற்சியால் ஒவ்வொரு வீட்டிற்கும் பாஸ்போர்ட் தேடிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஸ்போர்டுக்கான விண்ணப்பிப்பவர்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 8 வயது முடிந்த குழந்தைகளுக்கு விண்ணப்ப கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் 19 சதவீதம் கூடுதலாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பது எங்களது குறிக்கோளாகும். இதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அனைவரும் பயனடையும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறவும் வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பும் எளிதாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.
விழாவின்போது தபால் நிலையத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களுக்கு பாஸ் புத்தகங்களையும், 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ‘அடல் பென்சன் யோஜனா’ என்னும் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களையும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் வழங்கினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, திருமுருகன், கீதா ஆனந்தன், சந்திரபிரியங்கா, இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் அருண்குமார் சட்டர்ஜி, புதுச்சேரி அரசின் தலைமை செயலர் அஸ்வனிகுமார், மாவட்ட கலெக்டர் கேசவன், போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன், மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் வெங்கடேஸ்வரலு, மத்திய மண்டல அஞ்சல்துறை இயக்குனர் தாமஸ்லூர்து ராஜ், தபால்துறை மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை தமிழக முதன்மை அஞ்சல்துறை தலைவர் சம்பத் வரவேற்றார். முடிவில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக்பாபு நன்றி கூறினார்.
சென்னையில் இருந்து மாலை 4 மணியளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சிக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கிய சுஷ்மா சுவராஜை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் இரவு தங்கிய அவர், இன்று (சனிக்கிழமை) காலை திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

Related Tags :
Next Story