சுரண்டையில், கிணற்றில் குதித்து அரசு விரைவு பஸ் டிரைவர் தற்கொலை கடன் தொல்லையால் சோக முடிவு


சுரண்டையில், கிணற்றில் குதித்து அரசு விரைவு பஸ் டிரைவர் தற்கொலை கடன் தொல்லையால் சோக முடிவு
x
தினத்தந்தி 21 Jan 2018 2:15 AM IST (Updated: 21 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில், கடன் தொல்லையால் மனமுடைந்த அரசு விரைவு பஸ் டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுரண்டை,

சுரண்டையில், கடன் தொல்லையால் மனமுடைந்த அரசு விரைவு பஸ் டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரசு பஸ் டிரைவர்

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 53). அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மோட்டார்சைக்கிள் விபத்தில் குருசாமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் குணமடைந்து, செங்கோட்டையில் உள்ள பணிமனையில் அலுவலக வேலை பார்த்து வந்தார். மேலும் அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டாராம்.

நேற்று முன்தினம் காலையிலும், கடன் தொல்லை பற்றி வீட்டாரிடம் கூறியுள்ளார். தான் இறந்து போனால், அதனால் கிடைக்கும் இன்சூரன்சு தொகையை வைத்து கடனை அடைத்து விடலாம் என்று மனவேதனையுடன் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மாலையில் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

கிணற்றில் குதித்து தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலை சுரண்டை அரசு பள்ளிக்கூடத்தின் எதிரே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக சுரண்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக, தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் குருசாமி என்பதும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குருசாமிக்கு மாலதி என்ற மனைவியும், அஜய், ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

Next Story