ஜல்லிக்கட்டில் காளை உதைத்ததில் வீரர் பலி போலீஸ்காரர் உள்பட 21 பேர் காயம்
திருச்சி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை உதைத்ததில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் போலீஸ்காரர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 434 காளைகள் அழைத்துவரப்பட்டன. இதே போல் மேற்கண்ட பகுதியை சேர்ந்த 243 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை மருத்துவ பரிசோதனை செய்து தகுதியான 429 காளைகளை மட்டுமே மைதானத்திற்கு அனுப்பி வைத்தனர். 5 காளைகள் மருத்துவ பரிசோதனையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. இதேபோல் மாடுபிடி வீரர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதியான வீரர்களுக்கு சீருடை வழங்கி போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.45 மணிக்கு தொடங்கியது. முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை, தொட்டு வணங்கினர். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட் டன. ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க குழு, குழுவாக வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். போட்டியின் போது, விதிகளை பின்பற்றாத 9 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். இதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் துள்ளி குதித்து ஓடின. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் நீண்டநேரம் நின்று விளையாடியது. சில காளைகள் கம்பீரத்துடன் வந்து மிரட்டியதால், அதனிடம் இருந்து தப்பிக்க வீரர்கள், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி மீது ஏறிகொண்டனர்.
போட்டியில் 3-வது குழுவில் பங்கேற்று காளையை பிடிக்க முயன்ற திருச்சி கல்லுக்குழி அருகே உள்ள முடுக்கப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (வயது 22) என்பவரது நெஞ்சில் மாடு பின்னங்காலால் உதைத்தது. இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டு இருந்து மருத்துவ முகாமிற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் ரஞ்சித் இறந்தது தெரியவந்தது. மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், மாடுபிடி வீரர்கள் உள்பட 21 பேர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு போட்டி நடந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 3.45 மணி வரை நடைபெற்றது.

Related Tags :
Next Story