வைரமுத்துவை கண்டித்து பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்
கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தில் நடந்த அறிஞர்கள் எழுச்சி கூட்டத்தில் ஜீயர் பேசினார்.
ஸ்ரீரங்கம்,
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை சார்பில் அறிஞர்களின் எழுச்சி கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு இது. நமது நாட்டை பாரததாய் நாடு என்று அழைக்கின்றோம். ஆகவே பெண் தெய்வமான ஆண்டாளை பற்றி வைரமுத்து இகழ்ந்துரைத்ததை கண்டித்து பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் ஜீயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது கண்டிக்கத்தக்கது. இந்த பேச்சுக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கத்தை இந்த அறிஞர்களின் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளேன். இந்த அறிஞர்கள் அது குறித்து எடுக்கும் நடவடிக்கைக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். எங்கள் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் பிப்ரவரி மாதத்தில் ஆண்டாள் தெய்வத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது என்றார்.
கூட்டத்தில் திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் கோவிந்தராஜன், ஸ்ரீரங்கம் கிருஷ்ணமாச்சாரியர், சிதம்பரம் ரெங்காச்சாரியார்சுவாமி, ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தார் பராசர பத்திரி பட்டர் சுவாமி, சென்னை ராஷ்டீரிய சேவக் சமிதி சக்கரவர்த்தி, திண்டுக்கல் விளாஞ்சோலைப்பிள்ளை, கோவிந்த ராமானுஜதாசர், அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம், தஞ்சை இந்து மகாசபா சாம்ப வைத்யநாதன், இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு கமிட்டி மாநில தலைவர் நிரஞ்சன், மாநில பொருளாளர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை இந்து மக்கள் கட்சி சார்பில் வைரமுத்துவை கண்டித்து ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story