தேர்தலுக்கு பிறகு கூட்டணியா? ஜனதா தளம்(எஸ்) கட்சியை நம்பவே முடியாது தினேஷ் குண்டுராவ் பேட்டி
தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியை நம்பவே முடியாது என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டிக்கெட் கிடைக்காமல் போகலாம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம்(பிப்ரவரி) 10-ந் தேதி முதல் 3 நாட்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்.
தேர்தலில் எங்கள் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தேர்தலுக்கு பிறகு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பது இப்போது எதுவும் சொல்ல முடியாது.
கொள்கை எதுவும் இல்லை
தேவேகவுடா தலைமையிலான ஜனதா தளம்(எஸ்) கட்சியை நம்ப முடியாது. ஏனென்றால் கடந்த காலங்களில் அந்த கட்சி பா.ஜனதாவுடனும், காங்கிரசுடனும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி இருக்கிறது. அந்த கட்சிக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. அவர்களுக்கு ஒரு நிலையான நோக்கம் கிடையாது. அவர்கள் எதையும் செய்வார்கள். அவர்களை நம்பவே முடியாது.
தேர்தலில் ராகுல் காந்தி எங்கள் கட்சியில் மிக முக்கியமான பிரசார பீரங்கியாக செயல்படுவார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதே போல் முதல்-மந்திரி சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஸ்வர், பிரசார குழு தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக உள்ளனர்.
அதிக நேரத்தை செலவிடுவார்
ஆனால் ராகுல் காந்தி எங்கள் கட்சியின் முதன்மை பிரசார தலைவராக இருப்பார். பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் மாதத்திலும் ராகுல் காந்தி மீண்டும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்வார். அவர் கட்சிக்காக தீவிரமாக பிரசாரம் நடத்துவார். சட்டசபை தேர்தலுக்காக அவர் கர்நாடகத்தில் அதிக நேரத்தை செலவிடுவார். காங்கிரஸ் சார்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி சித்தராமையாவும் மாநிலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். கர்நாடகத்தில் எங்கள் கட்சியின் ஆட்சிக்கு மக்களிடையே எதிர்ப்பு அலை இல்லை. நாங்கள் மக்களுக்கு 165 வாக்குறுதிகளை கொடுத்தோம். அதில் 156 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். கர்நாடகத்தில் எங்கள் கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.
நல்ல வேட்பாளர்களை நிறுத்தவே...
நாங்கள் கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெற்றதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலர் சரியான முறையில் செயல்படாமல் இருந்தால், அவர்களின் தொகுதிகளில் வேண்டுமானால் மக்கள் எதிர்ப்பு மனநிலையில் இருக்கக்கூடும்.
அதுபோன்ற தொகுதிகளில் நாங்கள் வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் மாற்றப்படுவார்கள். நாங்கள் நல்ல வேட்பாளர்களை நிறுத்தவே விரும்புகிறோம்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Related Tags :
Next Story