சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே வாரிய தலைவர் ஆய்வு
சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தில் ரெயில்வே வாரிய தலைவர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் தெற்கு ரெயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். முன்னதாக வாரிய தலைவர் வருவதாக வந்த தகவலையடுத்து வேக வேகமாக ஆயத்த பணிகள் நடந்தன.
சென்னை,
ரெயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோகனி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் தூய்மைப்படுத்துதல், வர்ணம் பூசுதல் என கடந்த சில நாட்களாக ஆயத்த பணிகளை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் வேகவேகமாக செய்து முடித்தனர்.
இந்த நிலையில் ரெயில்வே வாரிய தலைவர் ஆய்வு நடத்த இருப்பதை அறிந்த பத்திரிகையாளர்கள் நேற்று சென்டிரலில் செய்தி சேகரிக்க வந்தனர். அவர்களிடம், உங்களை நாங்கள் அழைக்கவில்லையே? எதற்காக வந்தீர்கள்? என்று ரெயில்வே அதிகாரிகள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நேரத்தில் ரெயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோகனி சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்தார். உடனே அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், ரெயில் நிலைய மேலாளர் அலுவலகத்துக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பலகையில் சென்டிரலின் உட்புறத்தோற்றத்தின் வரைபடம் ஒட்டப்பட்டு இருந்தது. அதை ரெயில்வே வாரிய தலைவருக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்குள் சென்று பல இடங்களை ஆய்வு செய்தார்.
6 மற்றும் 7-வது நடைமேடையில் ஆய்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ரெயில்வே வாரிய தலைவர் அந்த நடைமேடைகளில் ஆய்வு செய்தபடி நடந்து சென்றார்.
அப்போது தண்டவாளங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் (‘கேங் மேன்’) ரெயில்வே வாரிய தலைவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாரிய தலைவர் உறுதி அளித்தார்.
பின்னர் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வரை அமைக்கப்பட உள்ள மேற்கூரையுடன் கூடிய நடைபாதை, ரெயில் நிலையத்துக்குள் அமைக்கப்பட உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. உணவு மையம் தொடர்பான விளக்கத்தையும் அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.
பின்னர் ரெயில்வே வாரிய தலைவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- விமான டிக்கெட் கட்டண நடைமுறையை ரெயில் டிக்கெட்டுகளிலும் கொண்டு வர கட்டண மறுஆய்வு குழு சிபாரிசு செய்துள்ளது. அது நடைமுறைப்படுத்தப்படுமா?
பதில்:- அது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. இதுவரை யோசனை எதுவும் கிடையாது.
கேள்வி:- வரும் பட்ஜெட்டில் ரெயில் கட்டண உயர்வு இருக்குமா? பயணிகளுக்கு நல்ல செய்தி எதுவும் காத்து இருக்கிறதா?
பதில்:- அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ரெயில் பயணிகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பயணம் செய்ய வைப்பது தான் எங்களுடைய நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து, அவர் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், பேசின்பிரிட்ஜ் பணிமனையிலும் ஆய்வு நடத்தினார். ஆய்வை முடித்த அவர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story