பாராளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஏராளமாக பணத்தை மிச்சப்படுத்த முடியும்


பாராளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஏராளமாக பணத்தை மிச்சப்படுத்த முடியும்
x
தினத்தந்தி 21 Jan 2018 4:15 AM IST (Updated: 21 Jan 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஏராளமாக பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

மும்பை,

பாராளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஏராளமாக பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் தேர்தல்

பாராளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனை வலியுறுத்திய பிரதமர் மோடி, தேர்தல் சக்கரம் தளர்வின்றி சுழல்வதால், ஏராளமான பணம் விரயமாவது மட்டுமின்றி, அரசின் வளர்ச்சி பணிகளை தடுப்பதோடு, கூட்டாட்சி தத்துவத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது என்று கூறினார். இந்த நிலையில், நேற்று மும்பையில் ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கில், நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

வளர்ச்சி பணி

அப்போது அவர் கூறுகையில், “தேர்தலுக்காக ஏராளமான பணம் செலவு செய்யப்படுகிறது. ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டால், ஏராளமாக பணத்தை மிச்சப்படுத்த முடியும். அவற்றை வளர்ச்சி பணிகளுக்கும், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் செலவிட முடியும்” என்றார்.

மேலும், பாராளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாரதீய ஜனதா எம்.பி. வினய் சகஸ்டிரபுத்தே பேசுகையில், “ஒரு தேசம், ஒரு தேர்தல் என்ற யோசனையை கொண்டவருவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றார்.

Next Story