பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

தானே - கல்யாண்
மத்திய ரெயில்வே வழித்தடமான தானே - கல்யாண் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 10.47 மணி முதல் பிற்பகல் 3.50 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு - கல்யாண் இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். எனவே இந்த ரெயில்கள் தானே, திவா, டோம்பிவிலி ரெயில்நிலையங்களில் மட்டும்நிற்கும். கல்வா, மும்ரா, கோபர், தாக்குர்லி ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது. பயணிகள் சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் கல்யாண், டோம்பிவிலி, திவாவில் இருந்து கல்வா, மும்ரா, கோபர், தாக்குர்லி ரெயில்நிலையங்களுக்கு செல்லலாம்.
பராமரிப்பு பணியையொட்டி காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.06 மணி வரை கல்யாணில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா, முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று வரும். இதேபோல காலை 10.05 மணி முதல் பகல் 2.42 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில்நிலையங்களில் நின்று செல்லும்.
துறைமுக வழித்தடம்
துறைமுக வழித்தடத்தில் இன்று காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பன்வெல் - நெருல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.06 மணி முதல் மாலை 4.34 மணி வரை பன்வெல், பேலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும், காலை 10.03 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூருக்கும் ரெயில்கள் இயக்கப்படாது.
இதேபோல டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் காலை 11.02 முதல் மாலை 4.26 மணி வரை பன்வெலில் இருந்து தானேக்கும், காலை 11.14 மணி முதல் மாலை 4 மணி வரை தானேயில் இருந்து பன்வெலுக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - வாஷி, நெருல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story