ஆட்சேபனைக்குரிய கருத்து பா.ஜனதா தொண்டர்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரினார்

ஆட்சேபனைக்குரிய கருத்து பா.ஜனதா தொண்டர்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரினார்
x
தினத்தந்தி 21 Jan 2018 4:28 AM IST (Updated: 21 Jan 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததால், அதிருப்தி அடைந்த பா.ஜனதா தொண்டர்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரினார்.

மும்பை,

ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததால், அதிருப்தி அடைந்த பா.ஜனதா தொண்டர்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரினார்.

ஆசிரியர்கள் மாநாடு

பீட் மாவட்டம் மஜல்காவ் பகுதியில் சமீபத்தில் ஆசிரியர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “முக்கிய பதவிகளுக்கு உயரிய பண்புகளை கொண்ட நபர்களை தேர்ந்தெடுப்பது கடினமாகி விட்டது. ஆகையால், நல்ல குணநலனும், நேர்மையும் உடையவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை” என்றார்.

பாரதீய ஜனதாவில் உயரிய பதவிகளுக்கு ஆசைப்படும், தொண்டர்களை மனதில் கொண்டு இந்த கருத்தை அவர் கூறியதாக தகவல் வெளியானது. இதனால், மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மீது தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.

சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு

இந்த நிலையில், தொண்டர்களிடம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரி அவர் வெளியிட்ட கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

பா.ஜனதா தொண்டர்களை காயப்படுத்தும் நோக்கில், நான் கருத்து கூறவில்லை. ஏதாவது தவறுதலாக அர்த்தம் கொள்ளப்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாடு வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

Next Story