சளிக்கு வேர்க்கடலை ஆகாது


சளிக்கு வேர்க்கடலை ஆகாது
x
தினத்தந்தி 21 Jan 2018 4:45 PM IST (Updated: 21 Jan 2018 2:20 PM IST)
t-max-icont-min-icon

உங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கவேண்டும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

* நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில் இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் என்பதால், அப்போது மாமிச உணவுகளை உட்கொண்டால், உடல் நலன் மேலும் பலவீனமாகும்.

* சளி, இருமல் தொந்தரவு இருந்தால் காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அவை பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

* நோய்வாய்ப்பட்டிருக்கும்போது காய்கறிவகைகள் எதையும் பச்சையாக சாப்பிடக்கூடாது. சமைத்துதான் சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும். நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

* நோய்வாய்ப்பட்டிருக்கும் வேளையில் இனிப்பு வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஜூஸ் பருகுவதும் கூடாது. ஏனெனில் அதனை ஜூஸாக தயாரிக்கும்போது அதில் அதிக அளவில் சர்க்கரை கலந்துவிடும். அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* பால் பொருட்களையும் ஒதுக்கிவிடுவது நல்லது. அதிலிருக்கும் கொழுப்புகள் செரிமானத்திற்கு பங்கம் விளைவிக்கும். ஒருசிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்தும்.

* காபி பருகுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் காபின் செரிமான கோளாறுக்கு வித்திடும். சாக்லேட், பிஸ்கெட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை மந்தநிலையை உருவாக்கும்.

* வேர்க்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவை சளித்தொந்தரவால் சிரமப் படுபவர்களுக்கு பாதிப்பை அதிகப் படுத்திவிடும்.

* மதுபானம் அருந்துவதும் கூடாது. அதிலிருக்கும் அமிலத்தன்மையால் வயிற்றுக்கு தொந்தரவு ஏற்படும். நோயை குணப்படுத்தும் மருந்துகளின் வீரியத்தையும் குறைத்துவிடும்.

Next Story