சங்கரன்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது. பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள புளியம்பட்டி, செந்தட்டி, நொச்சிகுளம், பொய்கை, வடக்குப்புதூர், ஆலங்குளம், வீரிருப்பு, களப்பாகுளம், இருமன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பூ உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் பூ உற்பத்தி செய்யப்படுவதற்குரிய தட்ப வெப்ப நிலை நிலவுவதால் ஆண்டுதோறும் பெரும்பாலான விவசாயிகள் பூ உற்பத்தி செய்கின்றனர்.
தினமும் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டிற்கு அரளி, பிச்சி, மல்லிகை, கனகாம்பரம், கேந்தி, சம்பங்கி உள்ளிட்ட 12 வகையான பூக்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து நெல்லை, ராஜபாளையம், மதுரை, தோவாளை உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வரத்து குறைவு
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் தினமும் 2000 கிலோ மல்லிகைப்பூ வரத்தும், சாதாரண காலங்களில் 1000 கிலோ மல்லிகைப்பூ வரத்தும் இருப்பது வழக்கம். தற்போது பனிப்பொழிவு காலம் என்பதால் மல்லிகைப்பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு மொத்தம் 15 கிலோ மல்லிகைப்பூ மட்டுமே வந்தது. வரத்து குறைந்ததால் மல்லிகைப்பூவை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story