தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்றோ பூபாலராயன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பட்டயத்தேர்வு
ஜூன் 2017-ல் நடந்த தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு, 2-ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், அவர் கள் படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கடந்த 17-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ- மாணவிகள் விடைத்தாளின் நகல் பெறவும், விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோரும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண் ணப்ப படிவத்தை பதிவிறக் கம் செய்து கொள்ள லாம். அதனை பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன், குறிப்பிட்ட கட்டண தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.
கட்டணம்
மேலும் தேர்வர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.275, ஆன்லைன் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள ஒரு பாடத்துக்கு ரூ.205, ஆன்லைன் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அன்றோ பூபாலராயன் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story