பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அனுப்பர்பாளையம்,
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 1-வது மண்டல குழு சார்பில் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கையில் கொடிகளுடன் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மண்டல நிர்வாகிகள் நடராஜ், சக்திவேல், கோபால், புஷ்பலதா, சதாம் உசேன், சின்னசாமி, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story