பா.ஜனதா மீது அதிருப்தி ஆனந்த் சிங் எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர முடிவு?
பா.ஜனதா மீது அதிருப்தி அடைந்துள்ள பல்லாரி மாவட்டம் விஜய நகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஆனந்த் சிங், பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,

ஆனந்த் சிங் எம்.எல்.ஏ.
பல்லாரி மாவட்டம் விஜயநகர் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஆனந்த் சிங். பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் சமீபகாலமாக பா.ஜனதா கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. தற்போது அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல்லாரியில் நடந்த பரிவர்த்தனா யாத்திரையில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்ததோடு, பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக சமீபத்தில் அவர் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரி சந்தோஷ் லாட் உடன் இருந்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் தயக்கம்
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலும் வருகிற சட்டசபை தேர்தலில் விஜயநகர் தொகுதியில் போட்டியிட அவருக்கு டிக்கெட் வழங்குவது குறித்து எந்த உறுதியையும் சித்தராமையா வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதற்கு, கனிம சுரங்க முறைகேட்டில் தொடர்புடைய பா.ஜனதா தலைவர்களை கட்சியில் சேர்க்க காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுவதும், ஆனந்த் சிங் எம்.எல்.ஏ. கனிம சுரங்க முறைகேட்டில் தொடர்பு கொண்டுள்ள ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமானவர் என்பதும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களில் காங்கிரஸ் கட்சியில் ஆனந்த் சிங் இணைவதற்கான காலம் தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன்
இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சிக்கமாது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து, எச்.டி.கோட்டை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிக்கண்ணா வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், சிக்கமாதுவின் மகன் அனில் குமார் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் செயல்பட்டு வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அவர் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்து இருப்பதாகவும், இதுதொடர்பாக அவர் சமீபத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் எச்.டி.கோட்டை தொகுதியில் போட்டியிட அவருக்கு அந்தகட்சி மேலிடம் டிக்கெட் வழங்க விரும்பவில்லை என தெரிகிறது.
அனுதாப வாக்குகளை...
இதனால் அதிருப்தி அடைந்துள்ள அனில் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அனில் குமார் காங்கிரசில் இணைத்து கொண்டு எச்.டி.கோட்டையில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதன் மூலம் அந்த தொகுதி மக்களின் அனுதாப வாக்குகளை பெற முடியும் எனவும் காங்கிரஸ் மேலிடம் கணக்கு போட்டுள்ளது.
இதனால் விரைவில் அனில் குமார் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Tags :
Next Story