பெற்றோர் தங்கள் கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது இறையன்பு ஐ.ஏ.எஸ். பேச்சு

பெற்றோர் தங்கள் கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்று தனியார் பள்ளி ஆண்டு விழாவில் இறையன்பு ஐ.ஏ.எஸ். பேசினார்.
சேலம்,
சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி ஆர்.ஆர்.கார்டனில் அமைந்துள்ள வாகீஸ்வரி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் ஆர்.ஆர்.சேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயலட்சுமி கோகுல் வரவேற்று பேசினார். முதல்வர் ராஜேந்திரன் ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் பள்ளி மாணவ-மாணவியரின் கண்கவர் நடனங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவை நடந்தன.
இதில் இறையன்பு ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டு ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கடந்த கல்வியாண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து அவர் விழாவில் பேசியதாவது:-
பள்ளி மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி, விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும். செல்போன், டி.வி.யை தவிர்த்து பிற மாணவர்களுடன் ஓடி விளையாட வேண்டும். பெற்றோர் தங்களது கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டும் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகும். ஆசிரியர்கள் கல்வி மட்டுமின்றி, ஒழுக்க நெறிகளையும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.
பள்ளிகளில் சினிமா பாடல்களை தவிர்த்து, பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் பாடல்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தினால் மாணவர்களிடையே தேசப்பற்று, ஒற்றுமை, நேர்மை போன்ற உணர்வுகள் உருவாகும்.
இவ்வாறு இறையன்பு ஐ.ஏ.எஸ். பேசினார். விழாவில் கல்வித்துறை இணை இயக்குனர் குமார், ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story