பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
பஸ் கட்டண உயர்வு காரணமாக புதுவை ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி,
பஸ் கட்டணத்தை தமிழக அரசு கடந்த 19-ந்தேதி இரவு அதிரடியாக உயர்த்தியது. கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு பஸ் கட்டணம் வெகுவாகவே உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வெளியூர் செல்லும் பஸ்களிலும் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர். ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, பயணிகள் அடுத்தகட்டமாக தேர்வு செய்வது பஸ் பயணங்களையே. ஆனால் கட்டண உயர்வு பஸ் பயணத்தையும் பயணிகள் மத்தியில் யோசிக்க வைத்துவிட்டது.
இதனால் பெரும்பாலான பயணிகள் ரெயில் பயணத்திற்கு மாறி விட்டனர். பாதுகாப்பான பயணம், கட்டணமும் குறைவு என்பதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த ரெயிலிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கமான கூட்டத்தை விட தற்போது அதிக அளவில் பயணிகள் வந்து இறங்கினர். அதேபோல் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக இந்த மாற்றம் காணப்படுகிறது. இங்கு மட்டுமின்றி சென்னையில் எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நேற்று தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் எவ்வளவு கூட்டம் இருக்குமோ? அதேபோன்ற பயணிகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், வைகை, அனந்தபுரி, நெல்லை, முத்துநகர், ராமேசுவரம், பொதிகை, மலைக்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் மிகுதியாகவே இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடித்து விடும் நோக்கில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதேபோல் சென்னையில் மின்சார ரெயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுமா?
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், “பஸ் கட்டணம் எங்களை மலைக்க வைப்பதாக உள்ளது. உதாரணமாக 5 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கூடுதலாக செலவாகிறது. இது நடுத்தர குடும்பத்துக்கு பெரிய சிக்கல் தான்.
இதனால் நெரிசலில் சிக்கினாலும் பரவாயில்லை என்று ரெயிலில் பயணம் செய்யும் முடிவுக்கு வருகிறோம். ரெயில்களில் கூட்டம் மிகுதியாக உள்ளது. எனவே தேவையை உணர்ந்து சிறிது காலம் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டால் நன்றாக இருக்கும்”, என்றனர்.

Related Tags :
Next Story