அதிகாரிகளை அரசு தான் காப்பாற்றும் விதிமுறைகளை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்


அதிகாரிகளை அரசு தான் காப்பாற்றும் விதிமுறைகளை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்
x
தினத்தந்தி 22 Jan 2018 3:45 AM IST (Updated: 22 Jan 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

பிரச்சினை என்றால் அதிகாரிகளை அரசு தான் காப்பாற்றும். ஆனால் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முதல்- அமைச்சர் நாராயண சாமி எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

காரைக்காலில் பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்துள்ளார். அவரிடம் இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ள மீனவர் களையும், அவர்களது படகு களையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். மேலும் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது எந்தெந்த காலகட்டங்களில் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்பகுதியிலும், இலங்கை மீனவர்கள் தமிழக கடல்பகுதியிலும் மீன்பிடிக்க லாம் என்பது தொடர்பாக முத்தரப்பு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையை முடித்து ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் நிலையில் உள்ளது. இதற்கிடையே அவர்களுக்கு சம்பளம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குமாறு எனது ஆலோசனை இல்லா மல் கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். இது விதி முறைகளை மீறியது. இது தொடர்பாக கவர்னருக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள் ளேன்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களை அங்கீகரிக்கக் கோரி யும், சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதில் ஐகோர்ட்டு எந்த உத்தரவினையும் பிறப் பிக்கவில்லை. அதிகாரம் பெற்ற நபரிடமிருந்து நியமன உத்தரவு வராததால் அவர்களை அங்கீகரிக்க முடியாது என்று சபாநாயகரும் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட மன்ற செயலகத்தின் அனுமதியின்பேரில்தான் சம்பளம் வழங்க முடியும். ஒவ்வொரு மாதமும் சபாநாயகருக்கு கோப்பினை அனுப்பி அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியாக 30 எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் பட்ஜெட்டில் ஒப்புதல் வழங் கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு மற்றும் சபாநாயகர் உத்தரவு இல்லாததால் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி தருவது சாத்தியமில்லா தது.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அமைச்சர் நமச் சிவாயம் கவர்னருக்கு விளக்க மாக கடிதம் எழுதியுள்ளார். நான் டெல்லி சென்றிருந்த போது இந்த பிரச்சினை தொடர்பாக கோர்ட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்குமாறு உள்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டேன். ஆனால் உள்துறை அமைச்சகத் தின் கடிதம் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் உரிமையை பறிப்பதை ஏற்க இயலாது.

எந்த கோப்பாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர், தலைமை செயலாளர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்-அமைச்சர் வழியாகத் தான் கவர்னருக்கு செல்ல வேண்டும். அனைவரும் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். ஒருசிலர் விதிமுறைகளை மீறும்போது அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுபோன்று செய்தவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மற்றவர்களுக்கு படிப் பினையாக அமைய வேண்டும். எந்த இடத்திலாவது அதிகாரி களுக்கு பிரச்சினை என்றால் அவர்களுக்கு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு தான் பாதுகாப்பு கொடுக்கும். குறிப் பாக மருத்துவ மாணவர் சேர் க்கை பிரச்சினையில் கவர்னர் புகாரின்பேரில் அரசு செயலா ளர்கள், அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போது, நாங்கள் பாதுகாப்பாக இருந்து அவர்களை காப்பாற்றி னோம். விதிமுறைக்கு உட் பட்டு செயல்படா விட்டால் அதிகாரிகளை பாதுகாக்க யாரும் இருக்கமாட்டார்கள். அதிகாரம் இல்லாதவர்கள் கையில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு செயல்பட நினைப்பது தவறானது.

புதுவையில் எம்.எல்.ஏ.க்களை வாரிய தலைவர் களாக நியமிக்க ஏற்கனவே சட்ட திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு ஜனாதி பதியின் ஒப்புதலும் பெறப் பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவரிடம் புதுவையில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகானிடம் கேளுங்கள் என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராய ணன் எம்.எல்.ஏ., அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story