இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி நீர் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி
இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி நீர் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
சென்னை,
இந்து ஆன்மிக கண்காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய கொடியின் மூவர்ணத்தை குறிக்கும் ‘திரங்கா சைகிளோத்தான்’ பேரணி நடந்தது.
சென்னை அடையாறு மத்திய கைலாஷில் இருந்து இந்த பேரணியை இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜலட்சுமி, ரோட்டரி அமைப்பின் (3232) கவர்னர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி அங்கிருந்து, சர்தார் பட்டேல் சாலை, காந்தி மண்டபம், ராஜ் பவன் வழியாக வேளச்சேரி குருநானக் கல்லூரி சென்றடைந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்களுக்கு வெள்ளை நிற ‘டி-ஷர்ட்’ வழங்கப்பட்டது. அதில், ‘ஒரு துளி நீரை காக்க பயணம்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இதேபோல ‘தண்ணீரை காப்போம் பூமியை காப்போம்’, ‘தண்ணீர் இல்லையேல் வாழ்க்கை இல்லை’, ‘நீரை மாசுப்படுத்துவதை நிறுத்துங்கள்’, ‘தண்ணீரை சேமியுங்கள் அது உங்களை காப்பாற்றும்’ என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்தன.

Related Tags :
Next Story