குடிபோதையில் கார் ஓட்டிய கல்லூரி முதல்வருக்கு 6 மாதம் ஜெயில்
குடிபோதையில் கார் ஓட்டிய என்ஜினீயரிங் கல்லூரி முதல்வருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,

விபத்து வழக்கு
நவிமும்பையில் உள்ள தனியார் என்ஜினீயர் கல்லூரியில் முதல்வராக இருப்பவர் சுனில் சவான் (வயது 51).
இவர் 2015-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி நவிமும்பை பாம்பீச் ரோட்டில் குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று மோதியதில், பெண் ஒருவர் பலியானதாக கூறி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
6 மாதம் ஜெயில்
இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, சுனில் சவான் ஓட்டிய கார் மோதியதால் தான் பெண் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்கப்படவில்லை.
அதே வேளையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது நிரூபணம் ஆனது. இதனால் குடிபோதையில் காரை ஓட்டிய குற்றத்திற்காக கல்லூரி முதல்வருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Related Tags :
Next Story