கமலா மில் தீ விபத்து சம்பவம் தீயணைப்பு அதிகாரி உள்பட மேலும் 3 பேர் கைது


கமலா மில் தீ விபத்து சம்பவம் தீயணைப்பு அதிகாரி உள்பட மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2018 4:15 AM IST (Updated: 22 Jan 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

கமலா மில் தீ விபத்து சம்பவத்தில் தீயணைப்பு அதிகாரி உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

கமலா மில் தீ விபத்து சம்பவத்தில் தீயணைப்பு அதிகாரி உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமலா மில் தீ விபத்து

மும்பை பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள ‘மோஜோ’ ஹூக்கா பார்லர் மற்றும் ‘ஒன்அபோவ்’ கேளிக்கை விடுதியில் கடந்த மாதம் 29-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் ‘ஒன்அபோவ்’ கேளிக்கை விடுதியில் பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்த இளம்பெண் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே ‘ஒன் அபோவ்’ விடுதி உரிமையாளர்கள் ஜிகார் சங்வி, கிரிபேஷ் சங்வி, அபிஜித் மங்கர் மற்றும் மோஜோ பார்லர் உரிமையாளர்கள் யுக் பதக், யுக் துல்லி ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மேலும் 3 பேர் கைது

இந்தநிலையில் போலீசார் இந்த சம்பவத்தில் தீ விபத்து நடந்த ஓட்டல்களுக்கு தடையில்லா சான்று வழங்கிய தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர பாபன் பாட்டீல்(வயது52) மற்றும் கமலா மில் உரிமையாளர் ரவி பந்தாரி(57), ஹூக்கா வினியோகஸ்தர் வினோத் பாண்டே(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story