விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவ படையில் வேலை


விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவ படையில் வேலை
x
தினத்தந்தி 22 Jan 2018 12:33 PM IST (Updated: 22 Jan 2018 12:33 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவ படையில் 108 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ந்திய துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று சி.ஐ.எஸ்.எப்.. இந்த படைப்பிரிவு மத்திய அரசின் பொதுத்துறை தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் ஈடுபடுகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

உதவி சப்இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் தரத்திலான பணிகளுக்கு மொத்தம் 118 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் உதவி சப்இன்ஸ்பெக்டர் பணிக்கு 31 இடங்களும், ஹெட் கான்ஸ்டபிள் பணிகளுக்கு 87 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், ஆக்கி, ஜுடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து, மல்யுத்தம், பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு:

உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஹெட்கான்ஸ்டபிள் பணி விண்ணப்பதாரர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கும், பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் புகைப்படம் உள்ளிட்ட தேவையான சான்றுகளை இணைக்க வேண்டும். விண்ணப்பம் 2-2-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://cisfrectt.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story