ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன் படிக்க விண்ணப்பிக்கலாம்
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வளமான வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் படிப்புகளில் ஒன்று ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி.
ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை வழங்கும் தேசிய ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி கவுன்சில் தற்போது ஜே.இ.இ. 2018 தேர்வுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. இதன்படி பி.எஸ்சி. ஹாஸ்பிடலிட்டி மற்றும் ஓட்டல் அட்மினிஸ்டேசன் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும். மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் இதற்கான தேர்வு முடிவு வெளியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 11-ந் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 28-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடங்கள், தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களை https://applyadmission.net/nchmjee2018/ என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story